ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மக்களுக்கு ஒன்றும் செய்யாதவர் ஸ்டாலின் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை மாவட்டம் சூலூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமிக்கு ஆதரவாக சின்னியம்பாளையம், சூலூர், வாகராயம்பாளையம், காடுவெட்டிப்பாளையம், சோமனூர், சாமாளபுரம் ஆகிய பகுதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய முதல்வர், பொய்யான அறிவிப்புகளை கூறி, ஸ்டாலின் மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருவதாக குறிப்பிட்டார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் ஒதுக்கிவைக்கப்பட்ட தினகரன், தற்போது துரோகம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
Discussion about this post