தேர்தலின் போது உடல் நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதுக்குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின்போது வாக்களிக்க வந்த வேலூரை சேர்ந்த துளசியம்மாள், வாக்குச்சாவடி மையத்தில் வைத்து மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதேபோன்று ஈரோடு, நெல்லை, புதுக்கோட்டை, கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 7 பேர் மரணம் அடைந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post