ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், ஒடிசாவில் 5-வது முறையாக பதவி ஏற்றுள்ள முதலமைச்சர் நவீன் பாட்நாயக்கிற்கு தனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒடிசாவின் வளர்ச்சிக்கு தமிழகம் பக்க பலமாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோன்று, ஆந்திர பிரதேச முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜெகன் மோகன் ரெட்டி தனது சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் வாழ்த்து தெரிவிப்பதாக முதலமைச்சர் பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். நூற்றாண்டுகளாக இரு மாநிலங்களும் கலாச்சாரம் மற்றும் பொருளாதார அடிப்படையில் நெருக்கமானவை என தெரிவித்துள்ள அவர், இந்த நல்லுறவு தொடர விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
Discussion about this post