அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துபாய் புறப்பட்டார்.
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முதலில் லண்டன் சென்ற முதலமைச்சர் முன்னிலையில், கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை சென்னையில் தொடங்குவதற்கான ஒப்பந்தம் உட்பட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்பிறகு அமெரிக்க சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்குள்ள பால் பண்ணையை பார்வையிட்டார்.
நியூயார்க் மற்றும் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டங்களில் தமிழகத்தில் தொழில் தொடங்க பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டின. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், 35 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 80 கோடி ரூபாய் முதலீடுகள் கிடைத்துள்ளதுடன், 26 ஆயிரத்து 500 பேர் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அதைத்தொடர்ந்து, டெஸ்லா நிறுவனத்திற்கு சென்ற முதலமைச்சர் மின்சார கார் தயாரிப்பை பார்வையிட்டார்.
Discussion about this post