கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் கட்டப்பட்டுள்ள உழவர் நாராயணசாமி நாயுடுவின் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை திறந்து வைக்கிறார்.
உழவர் நாராயணசாமி நாயுடுவிற்கு மணிமண்டபம் கட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து கோவை மாவட்டம் வையம்பாளையத்தில் மணிமண்டபம் கட்டுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதைத்தொடர்ந்து, நாராயணசாமி நாயுடுவிற்கு 30 சென்ட்டில் மணி மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
நாராயணசாமி நாயுடுவின் 96-வது பிறந்த நாளான நாளை இந்த மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். காலை 9 மணியளவில் நடைபெறும் விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, சம்பத், பெஞ்சமின், சட்டசபை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
Discussion about this post