கடலூர் மாவட்டத்தில் 50 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் கெமிக்கல் ஆலை நிறுவுவது தொடர்பாக, வெளிநாட்டு நிறுவனர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
முதலமைச்சர் கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் லண்டன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அமெரிக்காவில் ஹெல்டா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் கொள்கை ரீதியாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 50 ஆயிரம் கோடி முதலீட்டில், கடலூர் மாவட்டத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆலை அமைப்பது குறித்து அதன் நிறுவனத் தலைவர் புரனேந்து சாட்டர்ஜி மற்றும் நிர்வாக துணை தலைவர் ராபின் முகோபாத்யாய் ஆகியோருடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த நிலையில் ஆலை அமைப்பதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் இல்லத்தில் நடைபெற்றது. இதில், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் தலைமை செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Discussion about this post