தஞ்சாவூரில் வசித்து வரும் மிட்டாய் தாத்தா என்று அழைக்கப்படும் முகமது அபுசாலிக்கு 113வயது.இவர் தனது 50 வயதில் பர்மாவிலிருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார். சிறிது நாட்கள் டீக்கடையில் வேலைப்பார்த்தவர் நண்பரின் உதவியால் மிட்டாய் செய்வதற்கு கற்றுக்கொண்டு தானே தேங்காய் இஞ்சி, குளுகோஸ் மிட்டாய் தயாரித்து வருகின்றார்.
ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் மிட்டாய் தாத்தா குறித்து அறிந்த நமது நியூஸ் ஜெ தொலைக்காட்சி அவரிடம் பிரத்யேக பேட்டி எடுத்து ஒளிப்பரப்பியது.இதன் எதிரொலியாக அவரின் உழைப்பிற்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் முதியோர் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ’தன்னை பற்றிய சிறப்பு தொகுப்பு மூலம் அனைவரின் அன்பிற்கு ஆளானதாக மிட்டாய் தாத்தா நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.மேலும் தன்னைக் உலகறிய செய்த நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு
மிட்டாய் தாத்தா நன்றி தெரிவித்துள்ளார்.
113 வயதிலும் ’நான் உழைத்து தான் சாப்பிடுவேன்’ என்ற வைராக்கியத்தோடு வாழும் மிட்டாய் தாத்தாவை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.