சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாக பிரபல தற்காபுக்கலை நிபுணரும் நடிகருமான ஜாக்கி சான் தெரிவித்துள்ளார். குறிப்பாக, “மக்களுக்கு சொன்னவற்றை குறுகிய காலத்தில் சீன கம்யூனிஸ்ட் கட்சி செய்துள்ளது. எனவே அக்கட்சியில் இணைய விரும்புகிறேன்” என்று தெரிவித்துளார்.
சீனா-ஹாங்காங் இடையிலான பாதுகாப்பு சட்ட விவகாரம் உச்சத்தில் இருந்தபோதே ஜாக்கிஜான் சீனாவுக்கு ஆதரவாகப் பேசியது பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர இருப்பதாக அறிவித்தது ஹாங்காங் மக்களிடையே மேலும் பரபரப்பை அதிகரித்துள்ளது. இத்துடன், ஜாக்கி சான் ஹாங்காங்கில் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.