உள்நாட்டு விவகாரங்களில் தலையிட உரிமையில்லை – சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

எங்கள் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடக்கூடாது என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

லடாக்கின் கிழக்கு எல்லைப் பகுதியில், கடந்த மே மாதம் சீனப் படைகள் ஊடுருவ முயன்றதால், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இருதரப்பு ராணுவ அதிகாரிகள் 7 சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனிடையே, லடாக் யூனியன் பிரதேசத்தை இந்தியா சட்டவிரோதமாக அமைத்து இருப்பதாக குற்றம்சாட்டிய சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர், இதனை சீனா அங்கீகரிக்கவில்லை என்று கூறினார்.

இதற்கு, இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்சவா, இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் கருத்து தெரிவிக்க சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை என எச்சரிக்கை விடுத்தார்.

Exit mobile version