பிரதமர் மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.
வரும் 11ம் தேதி சீன அதிபர் ஜி ஜிங் பிங் காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்திற்கு வருகிறார். அங்கு பிரதமர் மோடியை சந்தித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். மேலும், மாமல்லபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு தலைவர்கள் சென்று பார்வையிட உள்ளனர். இந்தநிலையில், பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அர்ஜூனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரைக் கோயில், வெண்பந்துக் கல் ஆகிய வரலாற்று முக்கிய இடங்களுக்கு சென்று முதல்வர் பார்வையிட்டார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.