ஜூன் 30: புரட்சித் தலைவரின் அரசு சகாப்தம் தொடங்கிய நாள்

1977ஆம் ஆண்டு தமிழக அரசியலில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு. சினிமாக்காரன் என்ற பிறரது வெற்று விமர்சனங்களை வீழ்த்தி, வெற்றித் திலகம் சூடினார் பரிபூரண அரசியல் தலைவன் எம்.ஜி.ஆர். அதற்கான பொதுத்தேர்தல் நடந்த ஆண்டு 1977. கட்சி தொடங்கி முதல் சட்டமன்றப் பொதுத் தேர்தலும் அதுவே.

பெருவெற்றிக்குப் பின்னர் 1977ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியான இதே நாளில்தான் அரியணைப் பொறுப்பேற்றார்.

தன் மீது நம்பிக்கை வைத்து பொறுப்பைத் தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து மக்கள் சேவை தொடங்கிய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., காலம் முழுக்க சேவையாற்றி தன் கண்கள் மூடிய பின்னரும் சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்.

வாழ்ந்தவர் கோடிக்கும், மறைந்தவர் கோடிக்கும் மத்தியில் மக்களின் மனதில் நிற்கும் எம்.ஜி.ஆர்., அரசாங்கமாக, அதிகாரப்பூர்வமாக மக்கள் சேவை செய்யத் தொடங்கிய நாள் இன்று.

Exit mobile version