பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்ற அதிமுக! பெண்கள் இழிவுபடுத்தும் திமுக அரசு!

தமிழகத்தில் பெண்களின் வளர்ச்சியை பின்னோக்கி தள்ளி வரும், திராவிட மாடல் திமுகவின் திட்டங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும், ஆண்களுக்கு நிகராக, பெண்கள் பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். இதனை நன்கு அறிந்த முன்னாள் முதல்வரும், மக்கள் மனங்களில் நீண்டா புகழோடு வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்களும், புரட்சி தமிழர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினர். குறிப்பாக பள்ளி மாணவிகள் கணினி அறிவில் தங்களை மேம்படுத்தி கொள்ள இலவச மடிகணினி, வேலைக்கு செல்லும் பெண்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி விடக்கூடாது என்பதற்காக மானிய விலையில் இருசக்கர வாகனம், தாலிக்கு தங்கம் என பெண்களை வளர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும் வகையில், பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் வகையிலும், பல நல்ல திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டன.

ஆனால் விடியலை கொண்டு வருவதாக ஆட்சி பிடித்த, விடியா திமுக அரசு, ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து பெண்களை இழிவுபடுத்தியும், அவமரியாதை செய்யும் நிகழ்வுகளே அரங்கேறி வருகின்றன. முதலில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்ற திட்டத்தை செயல்படுத்தி, பெண்களை ஓசி என திமுக அமைச்சர் முதல், அடிமட்ட தொண்டன் வரை இழிவுபடுத்தும் நிலைதான் அரங்கேறியது. ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என கூறிவிட்டு, தற்போது தகுதியுடையவர்கள் என தங்களுக்கு தேவையானவர்களுக்கு மட்டும் உரிமை தொகை கொடுத்துவிட்டு, தமிழக பெண்களை இ-சேவை மையங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் அலைய வைத்து வேடிக்கை பார்த்து வருகிறது விடியா திமுக அரசு.

தற்போது புதியதாக பெண்களுக்கு நடமாடும் ஒப்பனை திட்டம் என்ற பெயரில் ரூ.4.37 கோடியை, திட்டமிட தெரியாத விடியா திமுக அரசு வீணடித்துள்ளது. வீட்டில் இருந்து ஒப்பனை செய்யவே நேரமில்லாமல் வாழ்க்கை தேடலுக்காக, தமிழகத்தில் பெண்கள் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த திட்டம் தேவை தானா, ஒரு திட்டத்தை எதற்காக செயல்படுத்துகிறோம் என்பது கூட தெரியாமல் அறிவித்த திமுக எனும் நாடக கம்பெனியில் மீண்டும் மீண்டும் மோசடித்திட்டங்கள் எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் வர இருக்கும் சூழ்நிலையில் திமுக நடத்தும் கூட்டத்திற்கு பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பெண்கள் ஒப்பனை செய்வதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா? இல்லை பிங்க் நிற பேருந்திற்கு லிப்டிக் அடித்து ஓசி, ஓசி என்று கூறி தமிழக பெண்களை தரம்கெட்டு விமர்சித்ததோடு, மேலும் வேதனையை தூண்ட விடியா திமுக அரசு திட்டமிட்டுள்ளதா? என்ற அச்சத்தில் தமிழக பெண்கள் உள்ளனர்.

Exit mobile version