ஆங்கில புத்தாண்டு – முதலமைச்சர் வாழ்த்து

மலரும் ஆங்கில புத்தாண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும் என, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விடுத்துள்ள செய்தியில், தமிழ்நாடு இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்திடவும், வறுமைக் கோட்டிற்குக் கீழ் எவரும் இல்லை என்ற நிலையினை அடைந்திடவும், பெண்களின் வாழ்வு மேன்மையுறவும், புரட்சித் தலைவி அம்மா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி, தமிழகத்தின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருவதால், அனைத்து துறைகளிலும் சாதனைகள் பல படைத்து, மத்திய அரசின் விருதுகளை தமிழக அரசு தொடர்ந்து பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் எண்ணற்ற நலத்திட்டங்களை, அனைவரும் சிறப்பான முறையில் பயன்படுத்தி, தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதோடு, வளமும் வலிமையும் மிக்க தமிழ்நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட, அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திடுவோம் என குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், மலரும் இப்புத்தாண்டு, தமிழ்நாட்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலரட்டும் என வாழ்த்தி, அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Exit mobile version