வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி

நீலகிரியில் பெய்த கனமழைக்கு பலியான குடும்பங்களுக்கான தமிழக அரசின் நிதியுதவியை, கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் உதகை, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்தது. இந்த கனமழையில் சிக்கி மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி உயிரிழந்த குடும்பங்களில் 5 குடும்பங்களுக்கான காசோலைகளை கால்நடைதுறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். ஒரு குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் வீதம், மொத்தமாக 50 லட்ச ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள ஒரு குடும்பத்திற்கு நாளை காசோலை வழங்கப்படும் எனவும், நீலகிரி மாவட்டத்தில் 49 முகாம்களில் 5 ஆயிரத்து 350 பேர் தங்கவைக்கபட்டு, அவர்களுக்கு தேவையான உணவு வசதி, மருத்துவ வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version