கடும் குளிரால் தேயிலை தூள் வரத்து குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை!

உறைபனி காரணமாக, குன்னூர், கோத்தகிரி, உதகை போன்ற பகுதிகளில் அறுவடைக்கு தயாரான தேயிலை செடிகள் எடுக்க முடியாமல் கருகி வீணாவதால், தேயிலை தொழிற்சாலைகளுக்கு தேயிலை கொள்முதல் குறைந்துள்ளது. நாள்தோறும் 5 ஆயிரம் கிலோ கொள்முதல் செய்யும் தொழிற்சாலைகளுக்கு 2 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வழங்க முடிகிறது. இதனால் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேயிலை தூள் வரத்து குறைந்துள்ளது. மேலும் தொடர்ந்து உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் உற்பத்தி குறைய வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version