முறைகேடாக திமுகவினருக்கு ஏலம் விடப்பட்ட கடைகள் சாலையோர வியாபாரிகள் முற்றுகை போராட்டம்!

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் நடைபாதையில், நகராட்சி சார்பில் 36 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளை ஏலம் விட்டு வியாபாரிகளுக்கு கடை ஒதுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக கடைகள் வைத்து வியாபாரம் செய்து வரும் சாலையோர வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்காமல், திமுகவை சேர்ந்த நிர்வாகிகளுக்கு, லட்சக் கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு, நகராட்சி அதிகாரிகள் கடைகளை ஒதுக்கியுள்ளனர். இதனை கண்டித்து, ஏராளமான சாலையோர வியாபாரிகள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பினர். பின்னர், கடைகளை ஏலம் விடுவதை ஒத்திவைக்க வேண்டும் என நகராட்சி ஆணையாளர் காந்திராஜிடம் மனு அளித்தனர்.

Exit mobile version