இதுக்காக 40 ஆண்டுகள் காத்திருந்தோம்!

நீலகிரி மாவட்டம் வனப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு பிறகு விளைந்து கிடக்கும் மூங்கில் அரிசியை எடுப்பதற்கு அதிகாரிகள் அனுமதிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாவனல்லா, தொரப்பள்ளி, தெப்பக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மூங்கில் காடுகளில் 40 வருடங்களுக்கு பிறகு மருத்துவ குணமுள்ள மூங்கில் அரிசி விளைச்சல் அமோகமாக உள்ளது. இந்நிலையில் அப்பகுதிகளில் கொட்டி கிடக்கும் மூங்கில் அரிசியை யாரும் எடுக்ககூடாது என்ற வனத்துறையினர் கெடுபிடியால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் பயனற்று கிடக்கும் அரிசியை கண்டு வேதனை தெரிவித்துள்ளனர்.

Exit mobile version