வயல்வெளியில் சுற்றித்திரியும் சின்னத்தம்பி யானையை பிடிக்க வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே, 13-வது நாளாக வயல்வெளியில் சின்னதம்பி யானை தஞ்சம் அடைந்துள்ளது. இந்த நிலையில், சின்னத்தம்பி யானை குறித்து விலங்குகள் நல ஆர்வலர்கள், அருண் பிரசன்னா மற்றும் முரளீதரன் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சின்னத்தம்பி யானையை பிடிக்க தமிழக வனத்துறைக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. சின்னத்தம்பியை பிடிக்கும் போது எந்த விதத்திலும் காயப்படுத்த கூடாது என்றும் சின்னத்தம்பியை முகாமில் வைப்பதா? அல்லது காட்டுக்குள் அனுப்பி வைப்பதா? என்று பின்னர் முடிவெடுக்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்தது.
சின்னத்தம்பி யானை, பயிர்களை தின்று பழகிவிட்டதால், அதனை முகாமில் வைத்து சிறப்பாக பராமரிப்பதாக வனத்துறை உறுதி அளித்தது. இதையடுத்து நீதிபதிகள் மணிக்குமார், முரளிதரன் அடங்கிய அமர்வு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.