யானைக்கு அருகில் நின்று வாகன ஓட்டிகள் செல்ஃபி எடுக்க கூடாது

நீலகிரி மாவட்டம், குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானைகளுக்கு அருகே நின்று வாகன ஓட்டிகள் செல்பி எடுக்க கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் கூட்டம் அவ்வப்போது வனப்பகுதிகளிலிருந்து வெளியேறி சாலையின் குறுக்கே நிற்பதால் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுகிறது. எனவே வனத்துறையினர் அங்கு முகாமிட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். காட்டு யானைகளின் அருகில் சென்று யாரும் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version