கோவையில் காட்டு யானைகள் தாக்கியதில் தோட்ட தொழிலாளி பலி

கோவை காருண்யா பல்கலைக்கழகம் பின்புறம் உள்ள சப்பாணி மடை பகுதியில் 2 காட்டு யானைகள் தாக்கி தோட்ட தொழிலாளி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாலை நேரத்தில் சப்பாணி மடை அருகே சென்று கொண்டிருந்த ரங்கசாமி என்பவரை அங்கு வந்த 2 காட்டு யானைகள் தூக்கி எரிந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் வன அலுவலர் வெங்கடேசன் தெரிவித்தார்.

Exit mobile version