துரோகிகளின் துரோகம் காரணமாக இடைத்தேர்தலை சந்திப்பதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, மத்திய அரசு அலுவலகங்களில், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று கொடுத்திருக்கலாம். ஆனால், திமுக அரசு அதனை செய்யவில்லை என்று குற்றம் சாட்டினார்.
துரோகிகளின் துரோகம் காரணமாக இடைத்தேர்தலை சந்திப்பதாக கூறிய முதலமைச்சர் தற்போது செயல்பட்டு வருவது மக்களின் அரசு என்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.
Discussion about this post