சத்தியமங்கலத்தில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடங்கி வரும் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் டிசம்பர் மற்றும் ஜூன் மாதங்களில் என ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கணக்கெடுப்பு இன்று தொடங்கி வரும் 4 ஆம் தேதி வரை 6 நாட்கள் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் பங்கேற்கும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு வனவிலங்கு கணக்கெடுப்பு குறித்த ஒருநாள் பயிற்சி சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரிஅம்மன் கோயில் சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது.

முதன்மை வனப்பாதுகாவலரும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குனருமான நாகநாதன் பயிற்சியை தொடங்கி வைத்தார். இந்த பயிற்சியில் மாவட்ட வன அலுவலர்கள், வனச்சரக அலுவலர்கள், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version