சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வண்ணத்து பூச்சிகள், பறவைகள் கணக்கெடுப்பு பணி

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நடைபெற்ற வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் கணக்கெடுப்பில் 241 வகை பறவைகள், 150 வகை வண்ணத்துப்பூச்சிகள் வசிப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகள் அதிகமாக வசிப்பதை அறிந்த வனத்துறை அதிகாரிகள் இதுகுறித்த கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தனர். அதன்படி முதன்முறையாக வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் பறவைகள் குறித்த 2 நாள் கணக்கெடுப்பு பணி நடந்தது.

புலிகள் காப்பகத்தில் உள்ள சத்தியமங்கலம், பவானிசாகர், டி.என்.பாளையம், தலமலை, ஆசனூர், கேர்மாளம், தாளவாடி உள்ளிட்ட 7 வனச்சரகங்களில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.

இதில் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் வசிக்கின்ற பறவைகள் மற்றும் வண்ணத்து பூச்சிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 241 வகை பறவையினங்களும், 150 வகை வண்ணத்துப்பூச்சி இனங்கள் வசிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version