2006 ஆம் ஆண்டு டிஸ்கவரி சேனலில் man vs wild நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை இங்கிலாந்தைச் சேர்ந்த பியர் கிரில்ஸ் என்பவர் தொகுத்து வழங்குகிறார்.கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் man vs wild நிகழ்ச்சி படமாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்துடன் பியர் கிரில்ஸ் தற்போது ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியானது கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் சரணாலயத்தில் சூட்டிங் செய்யப்பட்டுள்ளது.மேலும் காட்டு பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது ரஜினிக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
ஆனால் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் எனக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை, முள் குத்தியது அவ்வளவுதான் என்று விளக்கம் அளித்தார்.
இந்நிலையில் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பியர் கிரில்ஸ் பதிவிட்டுள்ளார். அதில் ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைத்துள்ளேன். மேலும் நரேந்திர மோடியுடனான நிகழ்ச்சி ஒளிபரப்பாகிய போது தொலைக்காட்சி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில் 3.6 billion impressions கிடைத்து சாதனை படைக்க முடிந்தது ‘என்று கூறியுள்ளார்.
After our episode with Prime Minister @NarendraModi of India helped create a bit of TV history, (3.6 billion impressions), superstar @Rajinikanth joins me next, as he makes his TV debut on our new show #IntoTheWildWithBearGrylls on @DiscoveryIN. #ThalaivaOnDiscovery pic.twitter.com/WKscCDjPZc
— Bear Grylls (@BearGrylls) January 29, 2020