அஸ்வின் சாதனை – தமிழில் வாழ்த்திய சச்சின்!

இந்திய ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் போட்டித் தொடர் நேற்று தொடங்கியது. நேற்று முதல்நாள் ஆட்டத்தில் 177 ரன்களுக்கு ஆஸ்திரேலிய அணியினை சுழலில் சுருட்டியது இந்திய அணி. குறிப்பாக ஜடேஜா சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் எடுத்திருந்தனர். அஸ்வின் 3 விக்கெடுகளை எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்களின் பட்டியலில் 10வது இடமும் இந்திய அளவில் இரண்டாவது இடமும் பிடித்தார். அஸ்வின் டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 450 விக்கெட்டுகள் எடுத்து சாதனையில் இடம் பிடித்திருக்கிறார். இவரது சாதனையை புகழும் விதமாக முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் வாழ்த்தினை தெரிவித்தார். அற்புதமான மைல்கல் என்று தமிழில் ட்வீட் செய்திருந்தார் சச்சின்.

Exit mobile version