இந்தியா சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பையினை வென்று பத்து ஆண்டுகள் நிறைவு!

ஆண்டு 2013. ஓவல் மைதானத்தின் அந்த இறுதிப் போட்டியில் ஜெயிக்கப்போவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்கிற பதற்றம் சூழ்ந்திருந்த இரசிகர்களின் கண்ணில் தாண்டவமாடியது. அதற்கு முக்கிய காரணம், ஐம்பது ஓவர் போட்டியாக இருந்த இறுதிப்போட்டியை மழையின் காரணமாக இருபது ஓவர் போட்டியாக மாற்றியமைத்ததே ஆகும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் உலகக்கோப்பையினை வென்று மகுடம் சூடியிருந்தது. சாதனை அணியாக திகழ்ந்த இந்தியா இந்தப் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு குறைவு என்றுதான் கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு இங்கிலாந்து ஆடுகளங்கள் ஒரு காரணம். இங்கிலாந்து ஆடுகங்கள் இந்திய அணியினருக்கு ஏற்ற வகையில் இல்லை என்கிற வாதமும் அன்றைக்கு வலுக்கத் தொடங்கியிருந்தது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளைப் பொறுத்தவரை உலகக்கோப்பை போட்டி முடிந்து இரண்டு ஆண்டு காலம் கழித்து நடைபெறும். அதுவும் இங்கிலாந்தில் மட்டும்தான் நடைபெறும். புள்ளிப்பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணியினருக்கு மட்டுமே இந்த போட்டியில் பங்குபெற வாய்ப்பு கிட்டும்.

அப்படிப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி, இரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்தார் அன்றைய கேப்டன் தோனி. ஒரு பந்திற்கு ஆறு ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற சூழலில், அஸ்வின் அந்த பந்தை லாவகமாக வீசி அணியினை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றார். இந்தக் கோப்பையுடன் இந்திய அணிக்கு கேப்டன் தோனி மூன்று கோப்பைகளைப் பெற்று தந்த வீரராக மாறினார்.

Exit mobile version