இந்தியா இப்படி விளையாடினால் எந்த காலத்திலும் கோப்பை வெல்ல முடியாது – சுனில் கவாஸ்கர் காட்டம்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது முடிவடைந்ததையொட்டி, அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இதானால் இந்தியாவைச் சேர்ந்த சீனியர் வீரர்கள் தற்போதைய இந்திய அணியின் கள செயல்பாடுகளைக் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள். முக்கியமாக இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரோகித், ரஹானே, கோலி, புஜாரா போன்ற வீரர்கள் எத்தனை ஆண்டுகளாக விளையாடி வருகிறார்கள்? அத்தனை அனுபவத்திற்கு பிறகும், டி20 தொடரில் விளையாடிவிட்டு வருவதால், டி20க்கு ஏற்ற ஷாட்களை விளையாடி அவுட் ஆனார்கள் என்று சாக்கு போக்கு சொன்னால், எந்த காலத்திலும் நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது. என்னத் தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து கண்டிப்பான முடிவுகளை இந்திய அணி நிர்வாகம் எடுக்க வேண்டும். அதை செய்யத் தவறினால், ஆசியக் கோப்பை தவிர்த்து, வேறு எந்த கோப்பையையும் கடைசிவரை இந்திய அணியால் வெல்ல முடியாது என்று சுனில் கவாஸ்கர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியானது விளையாடப் போகிறது. மே.இந்திய தீவுகள் அணி ஒன்றும் சிறப்பான அணி இல்லை. அவர்களுடன் மோதி 2-0 என்று வென்றாலும் அதனால் எந்த பயனும் இல்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவேளை மீண்டும் ஆஸித்திரேலியா அணியை எதிர்கொள்ளும் நிலை வந்தால் இந்திய அணி செய்த தவறையே மீண்டும் செய்யும்.

Exit mobile version