இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அஸ்வின் கூறும் அறிவுரை

வாய்ப்புகளை நோக்கி நீதான் செல்ல வேண்டும், வாய்ப்புகள் உன்னை தேடி வரும் என்று காத்திருந்தால் வெற்றி பெற முடியாது என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் ஆசோசியேசன் சார்பில் 34 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த விழாவில் 2017-18 மற்றும் 2018-19 ஆண்டுகளில் நடைபெற்ற லீக் போட்டியில் வெற்றி பெற்ற மாவட்ட அணிகளுக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிரிக்கெட் வீரர் அஸ்வின் பரிசுகளை வழங்கினார்.

அப்போது, தனது வெற்றிக்கு விடாமுயற்சியும் தனது தாயார் கொடுத்த தன்னம்பிக்கையும் காரணம் என்று அஸ்வின் கூறினார். வெற்றியாளனாக மாற வேண்டும் என்றால் வாய்ப்புகளை நோக்கி செல்ல வேண்டும் என்று இளம் வீரர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.

Exit mobile version