தமிழக சட்டப்பேரவையில் உரையாற்றிய முதலமைச்சர் பழனிசாமி, ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுகதான் என குறிப்பிட்டார்.
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்த போது திமுக உறுப்பினர் ஆஸ்டின் அடிக்கடி எழுந்து இடையூறு செய்ததால், முதலமைச்சர் ஆவேசம் அடைந்தார். அவை செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து திமுக உறுப்பினர் ஆஸ்டினை ஒருநாள் அவையில் இருந்து வெளியேற்றுவதாக சபாநாயகர் அறிவித்தார். பின்னர் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஆஸ்டினுக்கு விலாசம் கொடுத்ததே அதிமுகதான் என குறிப்பிட்டார்.
இதையடுத்து எதிர்க்கட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் கேட்டுக் கொண்டதால் திமுக உறுப்பினர் ஆஸ்டினுக்கு விதிக்கப்பட்ட தண்டனை திரும்ப பெறப்பட்டது.
Discussion about this post