புற்றுநோயினைக் கண்டுபிடிக்கும் எறும்புகள்!

சிறுநீரில் இருந்து வெளிப்படும் வாடை வாயிலாக, புற்றுநோயை கண்டறியும் திறன் எறும்புகளுக்கு உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இரு தினங்களுக்கு முன்பு காசநோயினை கண்டறியும் தன்மை எலிகளுக்கு உண்டு என்று பெல்ஜிய நாட்டு விஞ்ஞானிகள் ஆய்வு செய்து கூறியிருந்தனர். அதேபோல புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீர் மற்றும் வியர்வையை மோப்பம் பிடித்து
நோயை கண்டறியும் திறன் நாய்களுக்கு உள்ளதாக பல்வேறு ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது.

இந்த வகையில் எறும்புகளுக்கும் இந்த திறன் உள்ளது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளதாக அமெரிக்க நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. பரிசோதனையின்போது மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்களின் சிறுநீரினை வைத்து சோதித்துப் பார்த்துள்ளனர். எறும்புகள் தனது நுகரும் தன்மையின் மூலம் புற்றுநோய் உடையவர்களை எளிதில் கண்டறிந்து விடுகிறது என்று ஆய்வின் முடிவில் தெளிவாக தெரிந்ததாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Exit mobile version