இதை கடைப்பிடித்தால் மார்பக புற்றுநோய் வராது..

இன்றைய சூழ்நிலையில் பெண்கள் வேலைக்கும் சென்றுக்கொண்டு, வீட்டையும் பராமரிப்பதால் உடல்நலம் மீது கவனம் செலுத்துவது இல்லை. அதனால் உடல் எடையும் மிகவும் சுலபமாக அதிகரித்து விடுகிறது.பின்பு, 40 வயதை தொட்டவுடன் உடல் எடையால் மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 50 வயதிற்கு பிறகு உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருந்தால் மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம் என கண்டெறியப்பட்டுள்ளது.அதில் 50 வயதுடைய 1,80,000 பெண்களை ஆய்வு செய்ததில், உடல் எடையை பராமரித்தவர்கள் மார்பக புற்று நோயிலிருந்து தப்பித்துள்ளனர்.ஆனால் உடல் எடையை குறைக்காமல் அப்படியே இருக்கும் பெண்களிடம் புற்று நோயின் ஆபத்தை கண்டெறிய முடிவதாக கூறப்பட்டுள்ளது.

40 வயதை கடந்த பின்னர் பெண்கள் உடல் மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செல்லுத்தினால் இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம் எனவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version