தாம்பரத்தில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை அடுத்த தாம்பரத்தில், 250க்கும் மேற்பட்ட மாணவிகள் பரதநாட்டியம் ஆடி, புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தாம்பரத்தில் உள்ள பள்ளி வளாகத்தில், தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பரதநாட்டிய பயிற்சிப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 250 மாணவிகள் பங்கேற்று ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடினர். மேலும் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளான மாணவிகளும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், சென்னை கேன்சர் இன்ஸ்டிடியூட் பேராசிரியர்கள் டாக்டர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் விஜயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version