அறுவடை இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அறுவடை இயந்திரங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறும் விவசாயிகள் இதனை பயன்படுத்தி, ஒரு மணி நேரத்திற்கு ஆயிரத்து 800 முதல் 2 ஆயிரத்து 500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளனர். எனவே தமிழக அரசு வெளிமாநிலங்களில் இருந்து கூடுதல் அறுவடை இயந்திரங்களை காவிரி டெல்டா பாசன பகுதிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். 19 சதவிகிதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Exit mobile version