நெல் மூட்டைகளை பாதுகாக்க முடியல… இதுதான் திராவிட மாடலா ?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த தளிகைவிடுதி கிராமத்தில் விவசாயி செந்தில்குமார் தன் வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து வைத்திருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் அனைத்து நெல் மணிகளும் நனைந்து முளைக்கும் தருவாயில் உள்ளது. அதுமட்டுமின்றி தளிகைவிடுதி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மட்டும் 5 ஆயிரம் நெல் மூட்டைகளுக்கு மேல் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையுற்ற விவசாயி, அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பதற்கு புதிதாக கட்டிடம் கட்ட பணம் இல்லை, 100 கோடி ரூபாய் செலவில் கடலில் பேனா சிலை அமைக்க பணம் உள்ளதா என முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என்று விவசாயி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Exit mobile version