2,822 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா :அமைச்சர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாமில் கலந்துகொண்ட அமைச்சர் தங்கமணி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் சமூகநலம்-சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், 4 கோடியே 52 லட்சம் மதிப்பீட்டில், இரண்டாயிரத்து 822 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாக்கள், முதியோர் உதவித்தொகை ஆணைகள், வேளாண் பொருள்கள், அம்மா இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் மூலம், நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 23 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு அதில் 22 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version