தமிழகத்தில், இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கொண்டுவந்தார். பின்னர் பேசிய ஸ்டாலின், இருமொழி கொள்கை குறித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். அதோடு, புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர்ந்து பின்பற்றப்படும் என்று, மத்திய அரசுக்கு திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
Discussion about this post