1,254 கோடி ரூபாய் முதலீட்டில் 10 ஆயிரத்து 330 பேருக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கக் கூடிய தொழில் திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் தொழில் தொடங்க ஏற்படுத்தப்பட்டுள்ள கட்டமைப்புகள் குறித்து பல்வேறு நாடுகளை சேர்ந்த தூதரக அதிகாரிகள் அறிந்துகொள்ளும் நிகழ்ச்சியை சென்னை கிண்டியில் முதலமைச்சர் பழனிசாமி இன்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது சென்னை – பெங்களூரு இடையே தொழில்வழித்தடம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்டுள்ள கொரிய நாட்டை சேர்ந்த ஹானான் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். பின்னர் தமிழ்நாட்டில் வர்த்தகம் புரிதல் என்ற கையேட்டை முதலமைச்சர் வெளியிட தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, திறன்மிக்க மனிதவளத்தின் இருப்பிடம், தகவல் தொழில்நுட்ப சேவை, உதிரிபாகங்கள் உற்பத்தி என அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக கூறினார்.
Discussion about this post