ஈச்சம்பாடி வாய்க்கால்களில் வரும் 25 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது மற்றும் இடது வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது, இடதுபுற வாய்க்கால்களில் வரும் 25 ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இதனைத் தொடர்ந்து, விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
ஈச்சம்பாடி அணைக்கட்டில் தண்ணீர் திறப்பதன் மூலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 6,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post