பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்திற்கு சுமூக தீர்வு காண இருமாநில முதலமைச்சர்கள் கூட்டம் கேரளாவில் இன்று நடைபெறுகிறது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யக்கூடிய அதிகப்படியான மழை நீர் கேரளா வழியாக அரபிக்கடலில் வீணாக கலக்கிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் இரு மாநிலங்கள் ஒத்துழைப்புடன் பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டத்திற்கான ஒப்பந்தம் கைழுத்தானது.
ஆனால் ஒப்பந்தப்படி தமிழகத்துக்கான தண்ணீர் வழங்கப்படாமல் இருந்தது. இதனால் இரு மாநிலங்கள் இடையே நதிநீர் பகிர்வில் நீண்ட நாட்களாக இழுபறி ஏற்பட்டுள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை கூட்டம், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை விமானம் மூலம் கேரளா செல்கிறார்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இரு மாநில முதலமைச்சர்கள் தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் மூலம், தமிழக விவசாயிகளின் வாழ்வாதாராம் மேம்பாட்டுக்காக சுமூக முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post