தமிழகத்தில் உயர் மேம்பாலங்கள் மற்றும் விமான நிலைய விரிவாக்கத்திற்காக பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களை வழங்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தமிழகம் வந்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக தமிழகம் வந்துள்ள ராஜ்நாத் சிங்கை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார்.
அப்போது சென்னை அனகாபுத்தூர் மற்றும் திருச்சியில் கட்டப்பட்டு வரும் உயர் மேம்பாலங்களுக்காகவும், மற்றும் சென்னை, கோவை, திருச்சி, விமான நிலைய விரிவாக்கத்திற்காகவும், பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான நிலங்களை வழங்க, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரிடம், முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். இந்த சந்திப்பின் போது, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Discussion about this post