பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கான அம்மா பேட்ரோல் ரோந்து வாகனத்தின் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் புதிய ரோந்து வாகனத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காக 181 இலவசத் தொலைபேசி சேவை, மற்றும் ஒன் ஸ்டாப் சென்டர் போன்ற பிரிவுகளை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தி அதனை மகளிர் காவல் நிலையங்களுடன் இணைத்துச் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், காவல் நிலையங்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி பங்களிப்போடு இளஞ்சிவப்பு நிற ரோந்து வாகனம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அம்மா பேட்ரோல் என்ற பெயரில் செயல்படவுள்ள இதன் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
Discussion about this post