தமிழகத்தில், தகுதி முறை அடிப்படையில், கூடுதலாக 5 லட்சம் முதியோருக்கு உதவித் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் புதிய திட்டங்களை சேலம் மாவட்டம் எடப்பாடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, ஏழை எளியோருக்கு பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என்று கூறிய முதலமைச்சர், எதிர் காலத்தில் வீடு இல்லாதவர்கள் இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து விழாவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். விழாவில் அமைச்சர்கள் தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Discussion about this post