பாரூர் பெரிய ஏரியிலிருந்து 135 நாட்களுக்கு நீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் பெரிய ஏரியிலிருந்து ஏரியின் கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு நீர் திறந்துவிடுமாறு தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்று பாரூர் பெரிய ஏரியிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பிரதான கால்வாய்களில் முதல் போக பாசனத்திற்கு ஜூலை 2 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதி வரை நீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதனால் போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 2,397 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மை மூலம் உயர் மகசூல் பெற வேண்டும் என விவசாயிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post