பேரிடர்களால் ஏற்படும் தாக்கம், பாதிப்புகள், அபாயங்கள் குறித்த மதிப்பீடுகள், பாதிப்புகளை சீரமைத்தல், பேரிடர் இழப்பீடு வழங்குதல் மற்றும் தொலைநோக்குத் திட்டம் போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை தொலைநோக்கு திட்டம் அறிமுகப்பட்டுத்தப்பட்டுள்ளது. இதனை தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
Discussion about this post