கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புகளூர் வருவாய் வட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணோலி காட்சி மூலம் துவக்கி வைத்தார்.
அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக விளங்கும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மேம்பாட்டிற்காக, புதிய வருவாய் வட்டங்களை உருவாக்குதல் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய சொந்த கட்டடங்கள் கட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், கரூர் மாவட்டம் மண்மங்கலம், அரவக்குறிச்சி வருவாய் வட்டங்களை சீரமைத்து வேலாயுதம்பாளையத்தை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள புகளூர் வருவாய் வட்டத்தை முதலமைச்சர் எடப்படி பழனிசாமி காணோலி காட்சி மூலம் துவக்கிவைத்தார். இதேபோல், மதுரை மாவட்டம் வடபழஞ்சி பகுதியில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள தகவல் தொழிநுட்பவியல் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் 23 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தொழிநுட்பவியல் மற்றும் நிர்வாக கட்டடத்தை முதலமைச்சர் திறந்துவைத்தார்.
Discussion about this post