கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் அளவானது 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கர்நாடகாவின் கே.ஆர்.எஸ், கபினி ஆகிய அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீரின் வரத்து 80 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கே.ஆர்.எஸ் அணையிலிருந்து 39 ஆயிரத்து 427 கன அடியும், கபினி அணையிலிருந்து 23 ஆயிரத்து 333 கன அடி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒகேனக்கல்லில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பரிசல் இயக்க மீண்டும் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் மலர்விழி உத்தரவிட்டுள்ளார். அருவியில் குளிக்க 31-வது நாளாக தடை நீடித்து வருகிறது.