கும்பக்கரை அருவியில் தொடர் வெள்ள பெருக்கு காரணமாக 26-வது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டதில் மேற்கு மலைத்தொடரில் கும்பகரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் நீராடச் செல்வது வழக்கம். சில தினங்களாக மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அருவியில் வெள்ளப் பெருக்கு குறையாததால் 26-வது நாளாக இன்றும் அருவியில் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அருவியை பார்வையிடவோ, குளிக்கவோ கூடாது என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.