பாகிஸ்தானில் இருவேறு இடங்களில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் போலீசார், பொதுமக்கள், தீவிரவாதிகள் என 22 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் உள்ள சீன தூதரகத்தின் முன்பு 3 தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 2 போலீசார் 3 தீவிரவாதிகள் என 5 பேர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழப்பு குறித்து முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை.
ஆனால், தூதரக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவினைவாதிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அங்குள்ள ஹோங்கு மாகாணத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.