தரமான பிபிகிட் இல்லை – புதுச்சேரி செவிலியர் வெளியிட்ட ஆடியோ

புதுச்சேரியில் தரமில்லாத பிபிகிட் வழங்கப்படுவதால், கொரோனா பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் வெளியிட்டுள்ள ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் என 7 பேர் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், மருத்துவமனை வளாகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு சக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அரசு ஊழியர் சம்மேளன தலைவர் லட்சுமணசாமி, சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களுக்கு தேவையான உபகரணங்கள் சரிவர வழங்கப்படுவது இல்லை என குற்றம்சாட்டினார்.

இதனிடையே, இந்திரா காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை செவிலியர் பாக்கியலட்சுமி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரி அரசு தங்களுக்கு தரமான பிபிகிட் வழங்குவதில்லை எனவும், இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்கள் இறக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version