டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி மர்ம நபர்கள் 18 லட்சம் ரூபாய் கொள்ளை

அறந்தாங்கி அருகே டாஸ்மாக் கடை ஊழியரை தாக்கி விட்டு மர்ம நபர்கள் 18 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளை அடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த தோப்புவயல் பகுதியில் அரசுக்கு சொந்தமான மதுபானக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் விற்பனையாளர் கண்ணன் மற்றும் உதவியாளர் செந்தில், காளிதாஸ் ஆகியோர் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு 18 லட்சம் ரூபாய் பணத்தை பைக்கில் எடுத்துச் சென்றுள்ளனர்.

அப்போது அவர்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் சிலர், அவர்களை வழிமறித்து தாக்கி விட்டு பணத்தை கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version